
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லஹ்சூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவா கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனா(30) என்ற பெண் தனது கணவர் அனிலுடன் வசித்து வந்தார். அனிலுக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனா ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டவர். கணவரும் பல பெண்களுடன் உறவு வைத்திருந்ததால் மீனா தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மீனாவின் தந்தை ராம்சேவக் கூறும்போது, மீனாவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. எனது மகள் மீனாவுக்கு கணவரும், அவரது குடும்பத்தினரும் தொந்தரவு கொடுத்தனர். எனது மருமகன் அனில் ஒருமுறை ஒரு பெண்ணுடன் ஓடி சென்று விட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி அனில் வேறு ஒரு பெண்ணுடன் ஓடினார்.
அன்று இரவே எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் இறப்புக்கு காரணமாக அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.