
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு வழிப்பறி என மொத்தமாக உள்ள 35 வழக்குகளில் ஐந்து வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒன்பது வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.