
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவர் கார் ரேசர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் அஜித் ஆர்வம் உடையவராக இருந்து கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 200 கோடி வசூலை அடைந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் என்று தன்னுடைய 54வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில், தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கிய திரை கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினை வென்றுள்ளார். மேலும் சகோதரர் அஜித்துக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.