
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் இந்தியா பாரத நாட்டின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.
எனவே அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி செல்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாட்டு மக்கள் இந்திய கலாச்சாரத்தில் ஈடுபட்டு நிம்மதி பெறுகிறார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தை விட்டு விட்டு இந்திய கலாச்சாரத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே நம் நாட்டின் கலாச்சாரம் பெருமை ஆகியவற்றை நம் இளைஞர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இது குறிப்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் …#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BharathaSeva #CelebrateBharatham #LathaRajinikanth @rajinikanth #BinaryPost pic.twitter.com/qj7DRuAIkt
— Binary Post (@BinaryPost001) April 30, 2025