நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயன்பெறும் நிலையில் இந்த வேலைவாய்ப்பில் சேர்பவர்களுக்கு தனியாக அட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதனை விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ரூ. 4034 கோடி நிதி விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில் தமிழக அரசு அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் தற்போது மத்திய அரசாங்கம் ரூ. 2999 கோடி நிதியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது.