
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சூர்யாவின் 44வது திரைப்படம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ரெட்ரோ திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
வருகிற மே 1-ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசியாக சூர்யா நடிப்பில் ரிலீசான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இதனால் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சூர்யா கூறியதாவது, புகைப்படத்திற்கு யாரும் அடிமையாக வேண்டாம்.
நான் படத்திற்காக மட்டுமே சிகரெட் புகைக்கிறேன். தயவு செய்து யாரும் அதை சரி என்று எடுத்துக்கொண்டு உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு சிகரெட் தானே. ஒரு பப் என நினைத்து புகைப்படத்திற்கு அடிமை ஆகாதீர்கள்.
சிகரெட் உங்களை அடிமையாக்கி விடும். இதை எந்த வகையிலும் நான் ஆதரிக்க மாட்டேன். கண்டிப்பாக ரெட்ரோ படம் உங்களுக்கு பிடிக்கும். படத்தை நான் பார்த்து விட்டேன். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க முயற்சிக்கிறேன்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதே உங்களுக்காக தான். உங்களது அன்புக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன் என சூர்யா கூறியுள்ளார்.