ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடப்பட்டது.

இந்த நிலையில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் உள்ளோம் என கூறியுள்ளார்.