பஞ்சாப் மாநிலம் டேராபாச்சியில் உள்ள அமர்தீப் காலனியைச் சேர்ந்த பழ விற்பனையாளர் சுக்பீர் சிங், தொழிலின் போது நேர்ந்த மோசடியால் கவலையில் உள்ளார். கடந்த வாரம், ஒரு சிவப்பு நிற பிரெஸ்ஸா காரில் வந்த நபர் 3 கிலோ மாம்பழங்களை வாங்கியபின், விலை குறித்து சற்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரூ.480-இல் இருந்து ரூ.400-க்கு விலையை குறைக்க சம்மதித்த சுக்பீரை ஏமாற்றிய அந்த நபர், பணம் செலுத்தாமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

அவரை தடுக்க முயன்ற சுக்பீர் காரின் ஜன்னலை பிடித்ததாலேயே சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு, பஸ் நிலையம் அருகே கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரில் வந்த நபர், ரூ.400-காக இப்படி ஏமாற்றுவது வெட்கக்கேடானது என சுக்பீர் வருத்தத்துடன் தெரிவித்தார். சம்பவம் நடந்தவுடன் காரின் எண்ணை அவர் பதிவு செய்து, உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. மேலும், “இந்த மாதிரியான தவறான செயல்கள் அதிகரிக்கக்கூடும்” என சிலரும், “எங்கள் வீட்டு பக்கத்திலுள்ள பான் கடையும் சமீபத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது” என சிலர் பதிவிட்டுள்ளனர்.