இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாசி படர்ந்த ஆற்றில், பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று மெதுவாக நீந்தி செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை @dr.ajaykrishna_angara என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். பாம்பின் நீளம் சுமார் 20 அடி இருக்கும் போல காணப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரும் அந்த பாம்பின் அசுரன் உருவத்தை பார்த்து திகைத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ajay Angara (@dr.ajaykrishna_angara)

தற்போது வரை இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. அனகோண்டா பாம்பு என்பது உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும்.

விஷம் இல்லாவிட்டாலும், அதன் பிடி பலத்தால் பெரிய உயிரினங்களையே நொறுக்க முடியும். பொதுவாக, இது அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் பாம்பு வகை என்பதால் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் செல்லுவதில்லை.

இந்த வீடியோவில் பாம்பின் அமைதியான நீச்சல், அதன் பிரம்மாண்ட உருவம் மற்றும் இயற்கையின் வியப்பூட்டும் தருணமாக இணையதள வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது இதுவரை தெளிவாகப் தெரியவில்லை என்றாலும், உலகம் முழுவதும் இது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.