திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது போலீசார் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என கேள்வி கேட்டனர். அப்போது விவசாயி அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்பவர் சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

அவர் தான் தன்னுடைய மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.