
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிராஜுதினீன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஆஸ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு சம்பவ நாளில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் வீட்டில் குழந்தை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு ஆஸ்மா உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிராஜுதீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தீவிரமான மத விவகாரங்களை சமூக ஊடகங்களில் அவர் பரப்பி வந்துள்ளார்.
அதோடு மருத்துவ சிகிச்சை அவர் எதிராக இருந்ததால் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக அவர் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லவில்லை. இவர்களுடைய குடும்பம் சமுதாயத்துடன் தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அந்த தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட அறியாத நிலையில் அதில் மூன்று குழந்தைகள் ஹாஸ்பிடலில் பிறந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மனைவி இறந்ததை பற்றி கவலைப்படாமல் புதிய குழந்தையை பற்றி அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.