
பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் முதலில் டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து பாகிஸ்தான அணி வெற்றிக்காக தடுமாறுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியையும் நியூசிலாந்து அணி எளிதாக கைப்பற்றியது.
Pakistan’s 🇵🇰 Captain Mohammad Rizwan Dancing Video with just 5 Runs in 27 Balls 😲https://t.co/tzBm8OLmDO
— Richard Kettleborough (@RichKettle07) April 3, 2025
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 27 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ விமர்சித்ததோடு ரிஸ்வானை கலாய்த்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதாவது அவரை டான்சிங் ரோஸ் என்று கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் பேட்டிங் செய்வது போல் இல்லை டான்ஸ் ஆடுவது போன்றுதான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் நடுவர் ரிச்சர்டை இந்திய ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை அரை இறுதி போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி ரன் அவுட் ஆனார். அப்போது ரிச்சர்ட் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.