சித்தா படம் இயக்குனர் அருண்குமார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான படம் வீரதீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டபலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் 37 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் படத்தை இந்த அளவுக்கு வெற்றியை படமாக மாற்றிய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ என்ற வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த படம் வெளியாக இருந்த சிக்கல்கள் உங்களுக்கே தெரியும் .என்னுடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒரு திரைப்படமாக இது அமைந்து விட்டது. படத்தைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.