தமிழக பாஜக கட்சி விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். ஏற்கனவே நாடு முழுவதும் பாஜகவில் பொறுப்புகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் மீண்டும் அண்ணாமலை தலைவராக தொடர்வாரா இல்லையெனில் வேறு யாராவது அந்த பதவிக்கு வருவார்களா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதால் அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில் அவர்கள் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்பதால் அவரை மாற்ற மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற 9-ம் தேதி தமிழகத்தில் கிஷன் ரெட்டி தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்த இருக்கிறார்களாம். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது புதிய பாஜக தலைவர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு ஏப்ரல் 14ஆம் தேதி புதிய பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.