
இங்கிலாந்தில் உள்ள பிடர்பரோ பகுதியைச் சேர்ந்தவர் பிரான்ஸ் (33). இவர் பெண்களை மோசடி செய்து வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக பதிவு செய்த கொடூரம் வெளியாகி உள்ளது. இவர் கடந்த 2022 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரையில் அவரது வீட்டில் மறைமுக கேமராக்களை பொருத்தி பல பெண்களை தவறான முறையில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த சம்பவங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.
அதாவது பிரான்ஸ் இரவு நேர நைட் கிளப்புகளில் வரும் பெண்களை குறி வைத்து “ஆஃபர் பார்ட்டி” என ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த மதுபானங்களை குடிக்க வைத்து அவர்கள் சுயநினைவு இழந்த பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். இதேபோன்று புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண் குறித்த வீடியோவும் அவரிடம் இருந்தது.
அதில் அந்தப் பெண் மது போதையில் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் இருந்தன. இதேபோன்று பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பிரான்ஸிடமிருந்து கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பெண்களின் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள் அனைத்தையும் பிரான்ஸ் தனது சுய இன்பத்திற்காக வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின் அவரது குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.