ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆக செயல்படுகிறார். இவர் தலைமையில் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மைதானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் ரியான் பராக்கிடம் செல்பி கேட்டனர். அப்போது ரியான் பராக் மைதான ஊழியர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செல்போனை கையில் வைத்திருந்த ரியான் தன் பின்னால் நின்ற ஒரு ஊழியரை பார்த்து முறைத்து பார்த்தார்.

பின்னர் அவர் செல்பி எடுத்த பிறகு செல்போனை அவர்களுடைய கையில் கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டு சென்றார். முன்னணி வீரர்கள் கூட ரசிகர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். சமீபத்தில் போட்டியின் போது விராட் கோலியை காண அவருடைய ரசிகர் ஒருவர் ஓடிவந்த போது அவரை கட்டி அனைத்து பாதுகாவலர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எம்எஸ் தோனி கூட ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். ஆனால் இந்திய அணியில் இடம் பெறாத ரியான் இப்படி மோசமாக நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை பலரும் விளாசி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளது.