
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே மட்டும் தான் போட்டி என்று கூறினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் விஜய் குல்லா அணிந்து கொண்டு கலந்து கொண்டதோடு ஒரு நாள் முழுக்க நோன்பு இருந்தார். இதனை தற்போது அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக சாடியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, நம்முடைய முதல்வர் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் கிடையாது. இஸ்லாமிய குடும்பங்களில் ஒளியேற்றி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. ஒரு நாள் கஞ்சி குடித்துவிட்டு ஓடுபவர்கள் மத்தியில் என்றென்றும் இஸ்லாமியர்களின் மனதில் குடியிருப்பவர் நம் முதல்வர் ஸ்டாலின். உங்களிடம் வெறும் வாக்குகள் மட்டும் கேட்டு வரும் தலைவர் எங்கள் தலைவர் கிடையாது. உங்களுடைய வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதார உரிமையை மீட்டெடுத்து தரக்கூடிய தலைவர் தான் எங்கள் தலைவர். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 இடம் நிச்சயம் கண்டிப்பாக 234 இடங்களை வெல்வோம் என்ற முயற்சியில் செயல்படுவோம் என்றார்.