
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் கூறியதாவது மாண்புமிகு மோடி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்?
ஏன் ஜி தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே அலர்ஜி? தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க சார். பல பேருக்கு தண்ணி காட்டின ஸ்டேட் சார்,கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார். தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி மட்டும் வேண்டும். ஆனால், எங்களுக்கான வரி பகிர்வை மட்டும் தர மாட்டேன் என்பீர்களா? என நேரடியாக விமர்சித்துள்ளார்.