தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ஒரு கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும் எந்நாட்டு மக்களையும் பார்க்க தடை போடுவதற்கு நீங்க யாரு? என் மக்களை பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டா பார்த்தே தீருவேன்.

சட்டத்தை மதிக்கணும் என்ற ஒரு காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன். நேத்து வந்தவன் முதலமைச்சராகனும்னு கனவு காணுகிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று சொல்றீங்க. அப்போ எதுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கீங்க? அணை போட்டு ஆற்றை தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்கனும்னு நினைச்சா சாதாரணமாக இருக்கிற காற்று சூறாவளியா மாறும். ஏன் சக்தி மிக்க புயலா கூட மாறும் என கர்ஜித்துள்ளார்.