மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியை சேர்ந்தவர் அஜயன்(27). இவர் மீது ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இளம்பெண் கூறியதாவது, அஜயன் என்னை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் நெருங்கி பழகினார். இதனால் நான் கர்ப்பமானேன். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது அஜயன் என்னை கடுமையாக தாக்கினார். இதனால் எனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது. அஜயனின் பெற்றோரும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். எனவே அஜயன் மீதும் அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜயன்(27), அவரது தந்தை ராஜசேகர்(60), தாய் விக்டோரியா(57) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.