
இஸ்ரேல் லெபானன் போர் ஒப்பந்தமானது கடந்த 2024 நவம்பர் மாதம் 27 ஆம் தேதி கையெழுத்தானது. இருப்பினும் பிணை கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக இஸ்ரேல் லெபானன் மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தியது. நவம்பர் மாதம் அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நடைபெற்ற வான்வழி தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக லெபானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் குறித்தும் ஹமாஸ் அமைப்பிடம் உள்ள பிணை கைதிகளை விடுவிக்க கோரியும் காசாவில் இஸ்ரேல் தனது ராணுவ பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சார கூட்டத்தில் “ஹமாஸே வெளியேறு” என காசா வீதிகளில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.