நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஒருவர் .இவர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. ஆனாலும் கூட ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.  முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கடந்த வருடம் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தற்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பாக படபிடிப்பின் போது காஸ்டியூம் தொடர்பான பிரச்சனையில் உதவி இயக்குனரை நயன்தாரா மோசமாக திட்டியதாகவும், இதனால் கோபமடைந்து சிந்தர்சி படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், நயன்தாராவை மாற்றி விட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த விஷயம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் குஷ்பூ இதற்கு மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், மூக்குத்தி அம்மன்-2 குறித்து தேவையற்ற பல வதந்திகள் வருகிறது. தயவு செய்து யாரும் அதை நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி படம் நடைபெற்று வருகிறது. சுந்தர் பற்றி அனைவருக்கும் தெரியும். நயன்தாராவின் தகுதியை நிரூபிக்கும் ஒரு நல்ல நடிகை. அவர் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.