
மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் திவாரி(27). இவரது மனைவி பிரியா சர்மா(24). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் பிரியாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த பிரகாஷ் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சகித்துக் கொண்டு வாழ்ந்தார். இதற்கிடையே ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரகாஷால் நடக்க முடியாமல் போனது. அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் பிரியா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார்.
உடனே பிரகாஷ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வர சென்றார். ஆனால் பிரியா அவருடன் வர மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு மனைவியும் மாமியாரும் தான் காரணம். அவர்கள் இருவரும் தனது குடும்பத்தையே உடைத்து விட்டதாக நேரலையில் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்ளும்போது மனைவியும், மாமியாரும் நேரலையில் பார்த்து கொண்டே இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மற்றும் பிரியா,அவரது தாய் கீதா(60) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.