உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்க சாவடியில் அடுத்தடுத்த வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது மணல் லாரி ஒன்று நிற்காமல் நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மணல் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.