
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வகுத்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விதிவிலக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விசாரணை மார்ச் 17-ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.