ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. 2023 உலக கோப்பை தொடரிலும் குரூப் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறி இருந்தது.  இதனால் இந்த அணியை அந்த நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஹாஷித் அப்ரிடி கடுமையாக சாடியுள்ளார். அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் ICU-வில் உள்ளது, பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலைக்கு தேர்வுக்குழுவினர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் நிலை தன்மையாக இல்லை. வீரர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தேர்வு குழுவில் தொடங்கி இயக்குனர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் .