உத்திரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் மோசடி செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், சிபிஐ போல நடித்து தன்னுடைய பெயருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது எனக் கூறியும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கைது என பயமுறுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் அளித்த புகாரின் படி இணைய வழி குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்துள்ளனர். இந்த நிலையில், ராம் சிங், அக்ஷய் குமார் மற்றும் நரேந்திர சிங் சவுகான் என்கிற 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் “டிஜிட்டல் அரஸ்ட்” என்ற முறையில் பெண்ணிடம் ரூபாய் 84 லட்சம் ஏமாற்றி மோசடி செய்ததாக தெரியவந்தது.

இதில் குற்றவாளியான அக்ஷய் குமார் ஒரு வங்கி ஊழியர் ஆவார். ராம்சிங் என்பவர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.