தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பொறுப்பாளர்களை  நியமித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட 28 அணிகளை உருவாக்கி அறிவித்தார். பொதுவாக முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மத்திய அரசால் பாதுகாப்பு வழங்கப்படும்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு தற்போது Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் Y பிரிவில் CRPF வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.