
அமைச்சர் காந்தி ஒரு ஊழல் அமைச்சர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்பு அடிவாரத்தில் இருந்து காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு பழனி முருகனை நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “இன்று உறுதியாக நாங்கள் சொல்கிறோம்.
ஊழல் அமைச்சர் காந்தி. 3 ஆண்டுகள் நாம் சுட்டிக் காட்டினோம் இந்த ஆண்டு அறிக்கையை மாற்றி பாலிஸ்டர் கொண்டு வந்து வேஷ்டி செய்கிறார்கள். அதை தடுத்துஅதிகாரி பணியிட மாற்றம் செய்துள்ளார்கள். தொடர்ந்து சொல்கிறோம். அறிக்கைக்கு பதில் அளிக்க ஒரு அறிக்கை, மூன்று அறிக்கை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் நாம் கொடுத்த அறிக்கைக்கு பதில் அளித்து, அதற்கு பதில் அளித்து, அதற்கும் பதில் அளிக்க ஒவ்வொரு அமைச்சருமே போட்டி போட்டுக்கொண்டு நான் செய்வது சரி என்கிறார்கள் என்று பேசியுள்ளார்.