நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை காங்கிரஸ் விமர்சித்தது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் இதற்கு ராஷ்டிரபதி பவனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது குடியரசு தலைவர் உரையை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவரை வலிமையற்ற பெண்மணி (Poor Lady) என்று கூறினார். அதோடு ஜனாதிபதிக்கு பேசுவதற்கு உடம்பில் சக்தி இல்லை எனவும் அவர் தன்னுடைய சக்தியை எல்லாம் இழந்து விட்டார். வலிமை இல்லாத பெண்மணி. பாவம் அவருக்கு பேசும் அளவுக்கு கூட சக்தி இல்லை என்று விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்டிரபதி பவன்,குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கண்ணியம் விளைவிக்கும் வகையில் சோனியா காந்தியின் பேச்சு அமைந்துள்ளது.
விளிம்பு நிலை சமூகங்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதியான குடியரசு தலைவரை சோனியா காந்தி அவமானப்படுத்தியுள்ளார். திரௌபதி முர்மு மக்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். அவருடைய அர்பணிப்பு ஒருபோதும் சோர்வடையாது. அவரை இப்படி கிண்டல் அடிப்பது சரி அல்ல என்று தெரிவித்திருந்தது. இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது இது நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியை அவமதிப்பது போல் இருக்கிறது.ஒட்டுமொத்த பெண்களையும் சோனியா காந்தி தன் பேச்சின் மூலம் அவமதித்துள்ளார் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் பழங்குடியினர் விவகாரத்தில் காங்கிரஸ் முந்தைய காலங்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
அதாவது, இந்தச் சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. பழங்குடியின மக்களை அணி திரட்டி மக்களாட்சியில் முன்னேற்றம் பெறச் செய்வதில் காங்கிரஸ் எப்போதுமே பின்தங்கியதற்கான ஆதாரங்கள் ஏராளம்.
• பழங்குடியினர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் மறுத்தது.
• பழங்குடியினர் போராளிகளை மரியாதையுடன் நினைவுகூருவதில் காலம் தாழ்த்தியது.
• அவர்கள் வாழ்க்கை முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், எப்போதும் சிறுபான்மையினர் என்றே பார்க்கப்பட்டது.
திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆனதில் இருந்து, அவரை அவமதிக்க Congress முயற்சி செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவரை “ராஷ்ட்ரபத்னி” என குறிப்பிடும் விதமாக பாலினப் பாகுபாடுடன் அவமதித்தார். இது அவர்களின் சாதிவெறி, இனவெறி, மற்றும் பணக்கார மேலாண்மை சிந்தனையை வெளிப்படுத்தியது.
குடியரசுத் தலைவர் ஏதாவது உயர்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தால், Congress இவ்வாறு அவமதித்து பேசியிருக்குமா? அவர்கள் இன்னும் ஒரு பழங்குடியினர் பெண் உயர்ந்த நிலையில் அமர்வதை ஏற்க முடியாத அளவிற்கு சாதி, இனவெறி, அரசியல் அகங்காரத்தில் மூழ்கியுள்ளனர்.
திரௌபதி முர்முவின் வளர்ச்சி ஒரு பழங்குடியினர் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்ற முக்கியமான நிகழ்வாக இருக்க, Congress அதை இழிவாக பேசுவது, அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் சிந்தனையுடன் செயல்படுகிறார்கள் என்பதற்கே உதாரணம்.
இந்த நாட்டின் பழங்குடியினர் மக்கள், பொதுமக்கள் அனைவரும் இவ்வாறு அவமதிப்பை ஏற்படுத்திய காங்கிரசின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள வேண்டும். “பாவம் பெண்மணி” என்று கூறியதன் மூலம், ஒரு சாதாரண பெண்ணாகவே பார்க்கும் காங்கிரஸ் எப்போது உண்மையான இந்தியாவை ஏற்கப்போகிறது? என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
