தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ளார். இதேபோன்று ஆதிக்  ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் வருகிற 6-ம் தேதி ரிலீசாகும் நிலையில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10- தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் விடாமுயற்சி படத்தில் திரிஷா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகர் ரெஜினா சான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் டீசர் மற்றும் முதல் பாடல் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தற்போது அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.