
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது தளபதி 69 படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் நான் ஆணையிட்டால் என்ற வசனத்துடன் சாட்டையை சுழற்றுவது போன்று இருந்தது. நடிகர் விஜய் எம்ஜிஆர் மாதிரி போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகர் விஜயை ஜனநாயகன் பட தோற்றத்தை வைத்து எம்ஜிஆர் போன்று பலவாறு எடிட் செய்து வெளியிடுகிறார்கள்.
மேலும் அந்த வகையில் எம்ஜிஆர் போன்று நடிகர் விஜய் இருக்கும் ஒரு போட்டோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் எம்ஜிஆர் போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.