மலையாள திரை உலகின் பிரபல நடிகரான மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் 2019 ஆம் வருடம் வெளியான திரைப்படம் லூசிபையர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் L2 எம்புரான் எனப் பெயரிடப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. நேற்று இந்த படத்தின் டீசரை பட குழு வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் பேசுகையில், “சமீபத்தில் தமிழில் நான் பார்த்த ட்ரெய்லர்களில் சிறந்தது என்றால் அது விடாமுயற்சி ட்ரெய்லர் தான். விடாமுயற்சி படத்தை பார்ப்பதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.