
தென்னிந்திய பகுதிகளில் இருந்து அடுத்த இரு தினங்களில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவரம் வாய்ப்புள்ளதோடு பனிமூட்டமும் நிலவும். அதோடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனையடுத்து ஜனவரி 30 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று ஜனவரி 31ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை வேலையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.