
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடரிலும் மூன்று ஒரு நாள் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நேற்று இரண்டாவது டி20 போட்டி இரண்டு அணிகளுக்கு இடையே சென்னையில் வைத்து நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 166 ரண்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க திலக் வர்மா பேட்டிங் செய்யத் தொடங்கிய பிறகு ஆட்டம் திசை மாறியது. போராட்ட நிலையில் இருந்த அணியை 55 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என அட்டகாசமாக விளையாடி 72 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறச் செய்தார்.
அதோடு ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்து திலக் வர்மா சாதனை படைத்துள்ளார். திலக் வர்மா இதற்கு முன்பு ஆடிய போட்டிகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த ரண்களை சேர்த்து இந்த போட்டியில் எடுத்த ரன்கள் 72 சேர்த்து மொத்தம் 318 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் 271 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து வீரர் மார்க் மற்றும் மூன்றாவது இடத்தில் 240 ரன்கள் எடுத்த இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் இடம் பிடித்துள்ளனர்.