
ஒடிசா மாநிலத்தில் சக்ரதர் ராணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பளம் விற்பனை செய்து வருகிறார். இவர் தெருத்தெருவாக சென்று அப்பளம் விற்கிறார். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறியுள்ளார். இவர் தினசரி 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் கூடையில் அப்பளத்தை சுமந்து நடந்தே செல்கிறார். இவர் உடாலா பகுதிகளின் தெருக்களில் விற்பனை செய்கிறார்.
இவர் ஒரு அப்பளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், தினசரி ஆயிரம் அப்பளங்களை விற்கிறார். இதன் மூலம் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000 மற்றும் ஒரு மாதத்திற்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மேலும் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு அப்பளத்தை 5 பைசாவிற்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.