தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹனுமா கொண்டா மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்களான ராஜ்குமார் மற்றும் வெங்கடேஸ்வரலு என்பவர்கள் முறை தவறி காதலித்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அப்போது வெங்கடேஸ்வரலு ஆத்திரத்தில் கத்தியால் ராஜ்குமாரை குத்தி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் பட்டப்பகலில் நடுரோட்டில் அரங்கேறியது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரலுவை கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.