
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரக்யாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவில் முன்னணி தொழிலதிபரான அதானியின் குடும்பம் வருகை தந்திருந்தனர். தினம்தோறும் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்குவதற்கு அதானி நிதி உதவி அளித்து வருகிறார். மேலும் ஒரு கோடி இறை புத்தகங்களும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அதானியின் மகன் ஜித்தின் திருமணம் நடைபெற உள்ளது.
அதானி மகன் ஜித்தீர்க்கும், சூரத் நகரின் வைர வியாபாரி ஜியாவின் மகள் தீவா ஷாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் உலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், மன்னர் சார்லஸ், பில் கேட்ஸ், போப் முதற்கொண்டு உலக பிரபலமானவர்கள் கலந்து கொள்வார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டி கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
58 நாடுகளை சேர்ந்த சமையல் கலை நிபுணர்கள், மற்றும் பத்தாயிரம் கோடி வரை செலவிடப்படும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து அதானிடம் கேள்வி கேட்டபோது, அவர் மிக எளிமையாக அதெல்லாம் நிச்சயமாக இல்லை என பதில் அளித்துள்ளார். மேலும் திருமணம் குறித்து அவர் கூறியதாவது, அனைத்து பொது ஜனங்களைப் போன்று மிக எளிமையான முறையில் ஜித்தின் திருமணம் முழுக்க பாரம்பரிய முறையில் நடைபெறும் என கூறியுள்ளார்.