தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் 2011 ஆம் ஆண்டு விஜயை வைத்து யோஹன் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில சூழ்நிலைகளால் அந்த படம் தடைப்பட்டது. இந்நிலையில் மீண்டும் யோஹன் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இம்முறை அந்த படத்தின் கதாநாயகனாக விஷால் நடிப்பார் என்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கதையில் மாற்றங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
