2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று ஏற்கனவே இயக்குனர் தெரிவித்திருந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இதனிடையே ரசிகர்களுக்கு பொங்கலுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் டீசரை நேற்று மாலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஜெயிலர் 2 படத்தின் டீசர் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் ரஜினி என்றாலே ட்ரெண்டிங் தான் என்று கொண்டாடி வருகின்றனர்.