தாய்லாந்து நாட்டில் காந்தீ என்ற 21 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு youtuber மற்றும் instagram பிரபலம். இவர் தன் நண்பர்களோடு புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும்போது அவர்கள் ஒரு சவால் விட்டுள்ளனர். அதாவது 20 நிமிஷத்தில் 2 மது பாட்டில்களை முழுமையாக குடித்தால் 75 ஆயிரம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். இந்த சவாலை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் மதுவை குடித்தார்.

அவர்கள் 350 மில்லி அளவுடைய 2 விஸ்கி வாங்கி கொடுத்தனர். இதனை குடி த்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.