
மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் முதல் இன கலவரம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு கலவரம் ஓயவில்லை. இந்நிலையில் கடந்த 31ம் தேதி காங்போங்கி மாவட்டத்தில் உள்ள குக்கி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. அதோடு அங்கு பணியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகரன் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் ஏற்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டும் வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.