விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் விமர்சையாக நடத்தி முடித்தார். அதிலிருந்து அரசியலில் விஜய் தனது செயல்பாட்டை தொடங்கி விட்டார். வருகிற 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை விஜய் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து நிவாரணம் கொடுத்தார். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திடம் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து அரசியலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அரசியலில் அவரது இலக்கு எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிட்டு தான் கருத்து சொல்ல முடியும் என கூறியுள்ளார். அதன் பிறகும் பத்திரிக்கையாளர் நீங்கள் விஜயுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி கேட்டனர். கடைசியா கொக்கி போட பார்க்கிறீர்கள் என சிரித்தபடி கூறிவிட்டு  அங்கிருந்து நகர்ந்து சென்றார்.