
உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் புத்தாண்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் நிலையில் தமிழகத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று புத்தாண்டு தினத்தில் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள், மாற்றுதிறனாளிகள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெறும்போது ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு பரிசாக அதாவது புத்தகங்கள் மற்றும் காலண்டர் போன்றவைகளை அவருக்கு கொடுத்தனர். அதன்படி அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என் நேரு, எம்பி கனிமொழி உட்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதோடு அவரிடம் புத்தாண்டு வாழ்த்தும் பெற்று மகிழ்ந்தனர்.