
கேரள மாநிலம் கொச்சியில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான திவ்யா உன்னி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 12,600 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்த நிலையில் ஏராளமானோர் நிகழ்ச்சியை காண குவிந்தனர். அந்த வகையில் கேரள மாந்திரி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது எம்எல்ஏ உமா தாமஸ் திடீரென தவறி மேடையில் இருந்து கீழே விழுந்தார். அவர் சுமார் 18 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.