
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள திக் மார்க் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி யாக வெற்றி பெற்றவர் வீரேந்திர குமார். இவர் மத்திய அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் ஒரு முறை கூட தேர்தலில் தோல்வியை சந்தித்ததே கிடையாது. இவர் தற்போது தன் தொகுதியில் உள்ள அலுவலகத்திற்கு தன்னை சந்திக்க வருபவர்கள் யாரும் தன் காலில் விழக்கூடாது என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார்.
அதாவது உதவி கேட்பவர்கள் காலை தொட்டு வணங்கி கேட்டால் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். அதாவது சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றையும் மனதில் கொண்டு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒருவர் காலில் மற்றொருவர் விழுவது சுயமரியாதைக்கு அவமானம் என்பதால் கூட இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.