
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் நித்யா என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பட்டதாரி. இவர் ஆடம்பரமான வாழ்க்கை மீது ஆசை கொண்டார். அவர் தன் தலையில் முடி இல்லாத காரணத்தினால் விக் வைத்துக் கொண்டார். இவர் விலை உயர்ந்த உடைகளை உடுத்திக்கொண்டு சினிமா பிரபலங்களுடன் இருப்பது போன்று போட்டோ எடிட் செய்து இணையதளங்களில் வெளியிட்டார். இவர் திருமண ஆன்லைன் வலைதளங்களிலும் தன் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் பல பெண்கள் இவரை தொடர்பு கொண்டனர். அந்த வாலிபர் அந்த இளம் பெண்களை ஹோட்டல் மற்றும் காபி ஷாப் போன்றவைகளுக்கு அழைத்து சென்று அனுதாபத்தை பெற தன் கையில் இருக்கும் வெட்டு காயங்களை காண்பித்துள்ளார். பின்னர் அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி ஆசை வார்த்தை பேசியதோடு வாட்ஸ் அப்பில் அவர்களை கவரும் விதமாக மெசேஜ் அனுப்பினார்.
அந்த இளம் பெண்கள் பெற்றோரிடம் வாலிபரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அந்த வாலிபர் பெண்களை எல்லாம் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே நித்யா சிக்கினார். இதேபோன்று மற்றொரு பெண்ணும் புகார் கொடுத்த நிலையில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனில் ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.