தெலுங்கானா மாநிலம் நாச்சாரம் பகுதியில் தீப்தி (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் அணில் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சங்கீதா ராவ், அணிலின் மனைவியான அனிதாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக 17 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. அதன் பின் சங்கீதா ராவ் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அணில் மற்றும் அவரது மனைவி அனிதா மற்றும் அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் தீப்த்தியிடம் அவரது தந்தை வாங்கிய பணத்தைக் கேட்டு தொல்லை செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் கோட்டில் வழக்கு தொடர்ந்தனர். அணில், தீப்த்தியிடம் பணம் கேட்டு தினமும் தொல்லை செய்ததால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி எனது சாவுக்கு அணில், அவரது மனைவி அனிதா, தந்தை சோமையா ஆகியோர் தான் காரணம். தினமும் என்னிடம் பணம் கேட்டு எனது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். எனது சாவுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க வீடியோ பதிவு செய்துள்ளார். அதோடு எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோவை கைப்பற்றிய காவல் துறையினர், அணில், அனிதா மற்றும் அவரது தந்தை சோமையா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.