“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் உயிரிழந்தது. நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது. பின் ஜாமனிலிருந்து வெளிவரப்பட்டது என தொடர் சிக்கலில் இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஹைதராபாத் துணை கமிஷனர் தனது இணையதளப் பதிவில் கூறியதாவது, “புஷ்பா 2” போன்ற பட ஹீரோக்களை வழிபாடு செய்யும் படங்களில் கொண்டு நீங்கள் சம்பாதித்த பணத்தை வீணடிக்காமல், நன்கு கருத்துள்ள படங்களை பாருங்கள். பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் இயக்கிய கருத்துள்ள படங்களுக்கு ரூபாய் 2000 முதல் 4000 வரை கூட செலவு செய்து படங்களை பார்க்கலாம். இதே நேரத்தில் “புஷ்பா 2” போன்ற படங்களை மிக குறைந்த செலவில் ஓடிடி கூட வீட்டிலிருந்தே பார்த்து கொள்ளலாம். என துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.