திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிகமான பக்தர்கள் வருவதை பயன்படுத்தி ஒரு சில இடைத்தரகர்கள் கோவிலில் பணிபுரியும் நிர்வாகிகளை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர். அதிலும் ஒருவரிடம் 200 ரூபாய் கொடுத்தால் நேரடியாக தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக பேரம் பேசுவதாக பல்வேறு புகார் எழுந்தது.

இந்த நிலையில் இடைத்தரகர்களாக செயல்பட்ட தங்கப்பழம்(55), யாஷிகா(21) ஆகிய இருவரையும் சமயபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள் மீது போலீசாரும், இந்து சமய அறநிலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.